Summer Tips: கோடையில் அதிகம் மசாலா சேர்க்கிறீர்களா..? அப்படினா..? இந்த பதிவு உங்களுக்குத்தான்...!
Summer Tips: இந்திய உணவுகளையும், மசாலாக்களையும் பிரிக்கவே முடியாது. ஆனாலும், இந்த கோடையில் இவற்றின் அளவை கண்டிப்பாக குறைத்து கொள்ளுங்கள். இல்லையெனில், உடலில் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்வீர்கள்.
இந்திய உணவுகளையும், மசாலாக்களையும் பிரிக்கவே முடியாது. ஆனாலும், இந்த கோடையில் இவற்றின் அளவை கண்டிப்பாக குறைத்து கொள்ளுங்கள். இல்லையெனில், உடலில் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்வீர்கள்.
கோடையில் அதிகம் மசாலா சேர்க்கிறீர்களா..?
கோடை காலம் வந்தாலே, சூரியனில் வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். அந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இது போன்ற சூழ்நிலையில், இளநீர், கரும்பு ஜூஸ் போன்ற பழச்சாறு குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..?
1. சில வகை உணவுகள் உங்க உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தும். எனவே, கோடையில் இந்த உணவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. இஞ்சி சேர்ப்பது நல்லது என்றாலும், கோடையில் வயிற்று கோளாறு ஏற்படும்.
2. ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் உங்க உணவுகளுக்கு கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் வழங்கலாம். ஆனால் கோடையில் இந்த மசாலா பொருட்கள் உங்க உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
3. கோடை காலங்களில் மக்கள் நண்பர்களுடன் வறுத்த சிக்கன், பார்மிகியூ சிக்கன் போன்றவை அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது. இந்த இறைச்சி வகைகள் உங்க உடல் வெப்பநிலையை அதிகரித்து புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
4. அதிகப்படியான பூண்டு உடலில் நீர்சத்தை குறைத்துவிடும். சிவப்பு மிளகாய் பொடி அளவுக்கு அதிகமான உடல் சூடு பாடாய் படுத்திவிடும். வெளி நேரத்தில், மஞ்சள், வயிறு உப்புசம், மலச்சிக்கலை தவிர்த்துவிடும்.