are you group admin be careful while handling

வாட்ஸ் ஆப் குரூப் அட்மினா நீங்கள்...? மிரட்டல் வருகிறது உஷார்.....

சமூக வலைத்தளங்கள் மூலம் நொடி பொழுதில் அனைத்து விவரமும் நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்,வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது .

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப் செயலியை பொறுத்தவரை அதில் பல ஆப்ஷன்ஸ் இருந்தாலும். வாட்ஸ் ஆப் குரூப் ஆப்ஷனை தேர்வு செய்து , நமக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவரையும் அதில் இணைக்கிறார்கள் .ஒரு கட்டத்தில் எதாவது ஒரு சூழ்நிலையில் சில பல பதிவுகளின் காரணங்களால் வாக்குவாதம் தலையெடுக்க, பிரச்னை பெரிதாகி தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் பாருங்களேன் .

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நிகில் கடே என்பவர் சிலநாட்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய குரூப் தொடங்கி அதில் 4 பேரை உறுப்பினராக சேர்த்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக சீர்த்திருத்தம் குறித்த சில கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது .

இந்த பதிவு மீதான கருத்து வேறுபாடு காரணமாக ,சண்டை முற்றி குரூப்பில் உள்ள மற்ற நபர்கள்,குரூப் அட்மின் நிகிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர் .பயந்து போன நிகில் தன் வீட்டை விட்டு , வெளியேறியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாக இருந்த நிகிலை போலீசார் தேடியுள்ளனர். முடிவில் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அந்த குரூப்பில் உள்ள 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . எனவே வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் போது கவனமாக கையாள்வது நல்லது