Are you eating most time hotel foods

உடல் சூடு அதிகம் உள்ளோருக்கு, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சூடு மேலும் அதிகரிக்கும். இதனால்,வயிறு இழுத்து பிடித்தல், அடிவயிறு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், எரிச்சல், சிவந்து போதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். 

அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை வருகிறது. நீரிழப்பு ஏற்படும் போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராதவர்களுக்கு கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். 

நீர் சத்து குறைவதால் குறு மயக்கம் மற்றும் ஆழ்நிலை மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சிறுநீரை அடக்கி வைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி, தொற்று ஏற்பட்டு சிறுநீர் பாதையில் அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. நீர்ச்சத்து, உடலில் சரியான அளவில் இருந்தால் தான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது, 'சன் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது. 


வெளியில் செல்லும்முன், 'சன்ஸ் கிரீம் லோஷனை,' அரைமணி நேரத்திற்கு முன்பே தடவி செல்லுங்கள். புறப்படும் நேரத்தில், தடவி சென்றால் அது பயனளிக்காது. கண்டிப்பாக கைப்பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். கையில் எந்த நேரமும் குடை இருக்கட்டும். கூடுமான வரை, மாலையில் வெளியில் செல்வதாக இருந்தால், மிகவும் நல்லது.