ஏப்ரல் மாதத்தில் வரும் அரசு விடுமுறைகள், முக்கிய விசேஷ நாட்கள், விரதங்கள் மற்றும் சுபமுகூர்த்தம் உள்பட முழுத்தகவல்கள் குறித்து இங்கு காணலாம்.
April Month Special Days 2025 : ஏப்ரல் மாதம் ஆங்கில வருடத்தின் நான்காவது மாதமாகும். இந்த மாதத்தில் 13ஆம் தேதியில் தான் தமிழ் மாதமான பங்குனி நிறைவடைகிறது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை தொடங்குகிறது. சித்திரை 1 என்பது தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் இம்மாதம் இளவேனிற்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றது மற்றும் பல ஆன்மீக சிறப்புகளையும் கொண்டது. சரி இப்போது இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரும் அரசு விடுமுறைகள், முக்கிய விசேஷநாட்கள், விரதங்கள் மற்றும் சுபமுகூர்த்தம் உள்பட முழுத்தகவல்கள் குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: மேஷ ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன் – பஞ்சகிரஹி யோகத்தால் செலவுகள் அதிகரிக்குமா?
ஏப்ரல் 2025 முக்கிய விசேஷ நாட்கள்:
ஏப்ரல் 6 (பங்குனி 23) ஞாயிறு - ஸ்ரீராம - நவமி
ஏப்ரல் 10 (பங்குனி 27) வியாழன் - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 11 (பங்குனி 28) வெள்ளி - பங்குனி உத்திரம்
ஏப்ரல் 14 (சித்திரை 1) திங்கள் - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 18 (சித்திரை 5) வெள்ளி - புனித வெள்ளி
ஏப்ரல் 30 (சித்திரை 17) புதன் - அட்சய திருதியை
இதையும் படிங்க: ஏப்ரல் 1 இன்று வங்கிகளுக்கு லீவா? இந்த மாத விடுமுறை நாட்கள் எத்தனை?
ஏப்ரல் 2025 முக்கிய விரதங்கள் நாட்கள்:
ஏப்ரல் 1 (பங்குனி 18) செவ்வாய் - சதுர்த்தி
ஏப்ரல் 1, ஏப்ரல் 29 (பங்குனி 18, சித்திரை 16) செவ்வாய் - கிருத்திகை
ஏப்ரல் 3, ஏப்ரல் 19 (பங்குனி 20, சித்திரை 6) (வியாழன், சனி) - சஷ்டி
ஏப்ரல் 8, ஏப்ரல் 24 (பங்குனி 25, சித்திரை 11) (செவ்வாய், வியாழன்) - ஏகாதசி
ஏப்ரல் 10, ஏப்ரல் 25 (பங்குனி 27, சித்திரை 12) வியாழன் - பிரதோஷம்
ஏப்ரல் 16 சித்திரை 3) புதன் - சங்கடஹர சதுர்த்தி
ஏப்ரல் 26 (சித்திரை 13) சனி - மாத சிவராத்திரி
ஏப்ரல் 29 (சித்திரை 16) செவ்வாய் - சந்திர தரிசனம்
ஏப்ரல் 12 (பங்குனி 29) சனி - பெளர்ணமி
ஏப்ரல் 27 (சித்திரை 14) ஞாயிறு - அமாவாசை
அரசு விடுமுறை நாட்கள்:
ஏப்ரல் 10 (வியாழன்) - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14 (திங்கள்) - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 18 (வெள்ளி) - புனித வெள்ளி
