Weight loss: எவ்வளவு முயற்சி செய்தும் வெயிட் குறையலையா...? தினமும் 1 டம்ளர் இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்கோ..!
Weight loss: இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தில், உடல் எடை பிரச்சனை என்பது அதிகரித்து காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கம், உடல் உழைப்பில்லாமை, வேலை பளு, மன அழுத்தம் போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தில், உடல் எடை பிரச்சனை என்பது அதிகரித்து காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கம், உடல் உழைப்பில்லாமை, வேலை பளு, மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சிலர், உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் கவலையில் உள்ளன. இனி கவலை வேண்டாம். இந்த ஒரு வெயிட் லாஸ் ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வெயிட் லாஸ் ஜூஸை காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகள் 1 டம்ளர் 250 எம்எல் அளவு குடித்து வர வேண்டும். அப்படி செய்தால், உங்களுக்கு ஒரு வாரத்தில் வித்தியாசம் தெரியும்.
இந்த இந்த வெயிட் லாஸ் ஜூஸ் எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
க்ரீன் டீ - 1 பாக்கெட்
ஆப்பிள் - நறுக்கியது 1 கப்
இஞ்சி – 1/4 கப்
ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முதலில், க்ரீன் டீ பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை, 200ml சுடுதண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மீடியம் சைஸ் ஆப்பிள் 1 கப் வெட்டி போட்டுக்கொள்ளுங்கள்.
அதனுடன், இஞ்சி தோல் சீவியது, ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து, நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கிரீன் டீ தண்ணீரை, மட்டும் சூடு நன்றாக ஆறியதும் ஒன்றாக கலக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் விழுது போல எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து அரைத்து கொள்ள வேண்டும். தயாரான இந்த வெயிட் லாஸ் ஜூஸை, வடிகட்ட கூடாது. அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துவிட வேண்டும்.