ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 13 மேக்புக் ப்ரோ, மேக்புக் ப்ரோ 15 மாடல் லேப்டாப் வெளியிடப்பட்டன.

தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஐ-போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் 25 ஆண்டுகளாக தயாரித்து வரும் மேக்புக் லேப்டாப்பின் புதிய வெர்சன் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டு தனது தயாரிப்பில் புதுமைகளை புகுத்திவரும் ஆப்பிள் நிறுவனம், மேக்புக் புதிய வெர்சனில் முக்கியமான ஒரு மாற்றம் செய்துள்ளது. அது என்னவென்றால் 45 ஆண்டுகளாக கணினியில் இருந்து வந்த ஃபங்ஷன் கீ இதில் நீக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பை கை விரல் ரேகை மூலம் திறந்து பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மேக்புக் ப்ரோ 13,15 இன்ச் அளவுகளில் சில்வர் மற்றும் கிரே நிறங்களில் உருவாகியுள்ளது. இந்த புதிய வெர்சநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டச் திரை வசதி இல்லாதது ஏமாற்றமே.

அம்சங்கள்:-

13 மேக்புக் ப்ரோ - 8 ஜிபி ராம், முந்தைய மாடலை காட்டிலும் 17% மெலிதாகவும், 23% எடைக் குறைவாகவும் இருக்கும்.

15 மேக்புக் ப்ரோ - 16 ஜிபி ராம், முந்தைய மாடலை காட்டிலும் 67% பிரகாசமான் திரை, இரண்டு மடங்கு வேகம்.