பட்டாசு விபத்தா....? உடனே கால் பண்ணுங்க இந்த நம்பருக்கு .....!!!

நாளை  தீபாவளி,  இப்பவே பட்டாசு  சத்தம்  கேட்க  ஆரம்பித்துவிட்டது.

எப்படியும்  விலங்குகள் , பட்டாசு சத்தத்தால் பாதிக்கும்.  

இதனை  தொடர்ந்து  வெடி விபத்துகளால்,  பாதிக்கும்  விலங்குகளை காப்பாற்ற மூன்று விலங்குகள் நல அமைப்புகள் களத்தில்  தயாராக  உள்ளது.

ஒரு சிலர், நாய்களின் வாலில் வெடிகளை கட்டி விடுவது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடவும் செய்கிறார்கள்.

இது போன்ற  செயல்களால் பாதிக்கும்  விலங்குகளை காப்பாற்ற
Hotel for Dogs, Cloud 9 Kennel and Nursing Care மற்றும் Save Earth for Next Generation ஆகிய சேவை அமைப்புகள் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி செயல்பட உள்ளன.

இதனை  தொடர்ந்து, சென்னையின் ஏதாவது ஒரு பகுதியில் விலங்குகள் காயம்பட்டதை நீங்கள் பார்த்தால் 7845018969, 9841588852, 9789042295 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.