பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டிய முதல்வர் ஜெகன் ..!  பெருமைக்குரிய "முதல் மாநிலமாக உருவெடுக்கும் ஆந்திரா"...!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியது. அதன்பின்னர் குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது தப்பித்து ஓடியதால் அவர்கள் 4 பேரையும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இருந்தபோதிலும் காவலர்களே என்கவுண்டர் செய்தால், பிறகு எதற்கு நீதிமன்றம் என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுகிறது. இருந்தபோதிலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போலவும் மக்களுக்கு தான் சட்டம் என்பதை உணர்த்தும் வகையிலும், அதற்கேற்றவாறு என்கவுண்டருக்கு பெரும் ஆதரவை தெரிவித்து உள்ளனர் மக்கள். இது ஒரு பக்கம் இருக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி திட்டங்களை சொன்னவாறே செய்து காட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு திஷா சட்டம்  2019 என பெயரிடப்பட்டுள்ளது. கிரிமினல் சட்டம் 2019 என்ற இந்த புதிய சட்டத்தின்படி பாலியல் வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வாரத்திற்குள், அதாவது 14 நாட்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அது குறித்த தீர்ப்பு 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கின்றது.

இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பாலியல் வழக்குகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கக் கூடிய ஒரே மாநிலம் ,அதுவும் விரைந்து முடிக்க கூடிய ஒரே மாநிலம் ஆந்திர மாநிலம் என்ற பெருமையை பெறும்.

இப்படி ஒரு சட்டத்தை தைரியமாக, மக்களுக்கு தேவையான, அத்தியாவசியமான,அவசரமான சட்டம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமலுக்கு வரும் தருவாயில் அனைத்து பெருமையையும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கிடைக்கும்  என்பதால் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது.