Anant Ambani Kalgi : ஆனந்த் அம்பானி,  ராதிகாவின் திருமணம்தான் தற்போது Talk of the World என்றே கூறலாம். அந்த அளவிற்கு எல்லாமே பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

கடந்த ஜூலை 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக வர்த்தக மையத்தில், இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு திருமணம் நடந்து முடிந்தது. மூன்று நாள் விழாவாக நடந்த இந்த திருமண வைபோகங்கள் இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிவடைய உள்ளது.

கடந்த ஆறு மாத காலமாகவே அம்பானி குடும்பத்தினர், இந்த திருமணத்திற்கான பல்வேறு ஏற்பாடுகளையும், சுப நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் நிலையில், ஆடம்பரமாக நடந்த இந்த திருமணம் குறித்து தான் இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. சுமார் 5000 கோடிக்கு மேல் செலவு செய்து, ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் அவரது தந்தை முகேஷ் அம்பானி. 

மகன் திருமணத்தில் 1000 மணிநேர உழைப்பில் உருவான 100 காரட் வைர நெக்லஸ் அணிந்திருந்த நீதா அம்பானி! இத்தனை கோடியா

திருமணத்தில் பங்கேற்ற அம்பானி குடும்பத்தினர் மட்டுமே, பல நூறு கோடிகள் மதிப்பிலான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து வந்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் நிலையில், தனது திருமண விழாவில் ஆனந்த அம்பானி அணிந்திருந்த ஒரு ஆபரணம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது. 

Kalgi எனப்படும் ஆபரணங்கள், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களால் அணியப்படும் ஒரு அணிகலன் என்று கூறப்படுகிறது. பொதுவாக ராஜாக்களின் தலைப்பாகையில் தான் இந்த அணிகலன் இருக்குமாம். பெரும்பாலும் அரிய வகை வைரங்களால் உருவாக்கப்படும் அந்த அணிகலனை அணிந்து தனது திருமணத்தில் அசத்தியிருக்கிறார் ஆனந்த் அம்பானி. 

ஆனந்த் அணிந்திருந்த Kalgi எனப்படும் அந்த அணிகலனின் விலை சுமார் 160 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. திருமணத்தில் ஆனந்த் அணிந்திருந்த ஆடைகள் கூட, முழுக்க முழுக்க கைகளால் நெய்யப்பட்டு, நேர்த்தியான கற்கள் பதிக்கப்பட்ட ஆடை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரூ.2 கோடி வாட்ச்.. ஷாருக்கான் முதல் ரன்வீர் சிங் வரை பரிசளித்த ஆனந்த் அம்பானி.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?