Asianet News TamilAsianet News Tamil

ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் விலை தெரியுமா? அதுக்கே அப்படின்னா; இதுக்கு என்ன சொல்லுவீங்க!!

அம்பானி குடும்பம் என்றாலே அனைத்தும் பிரம்மாண்டம் தான். அவர்கள் உடுத்தும் ஆடையில் இருந்து, வரும் கார் முதல், வைத்திருக்கும் பர்ஸ் முதல் எல்லாமே தனி தோரணைதான்.

Anant Ambani Rs 18 Cr Patek Philippe Luxury Wristwatch
Author
First Published Apr 7, 2023, 5:44 PM IST | Last Updated Apr 7, 2023, 5:44 PM IST

உலகிலேயே பணக்கார பட்டியலில் இடம் பிரித்து இருக்கும்  முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சமீபத்தில் மும்பையில் நீடா முகேஷ் ஆர்ட் கல்ட்சுரல் சென்டர் என்ற பெயரில் கலை  பண்பாட்டு கூடத்தை திறந்து இருந்தார். இதற்கான திறப்பு விழா பெரிய அளவில் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், பாலிவுட் பட்டாளம் என்று திறப்பு விழாவே அமர்க்களப்பட்டது.  

இந்த விழாவிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி தனது வருங்கால மனைவியுடன் வந்து இருந்தார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர்களது திருமணம் எப்போது, எங்கு, எவ்வளவு ஆடம்பரமாக நடக்கும் என்பதைப் பார்ப்பதற்கு அம்பானி ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், தனது அம்மா நீடா விருப்பத்தின் பேரில் திறக்கப்பட்ட பண்பாட்டு மைய விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் உடன் ஆனந்த் அம்பானி கலந்து கொண்டார். ஆனந்த் கருப்பு நிற ஆடையிலும், ராதிகா இளம் நீல நிற ஆடையிலும் வந்து இருந்தனர். அனைவரின் கவனமும் இவர்களது மீதுதான் இருந்தது. 

Anant Ambani Rs 18 Cr Patek Philippe Luxury Wristwatch

இந்த காதல் ஜோடியை உற்று நோக்குவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அதுதான் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த ரூ. 18 கோடி மதிப்பிலான ரிஸ்ட் வாட்ச். அவர் அணிந்து வந்திருந்த பதேக் பிலிப்பி பிராண்ட் வாட்ச் அனைவரின் கண்ணையும் உறுத்திவிட்டது. இது இருபது அம்சங்களைக் கொண்டுள்ளது. தலைகீழான கேஸ் மற்றும் இரண்டு தனிப்பட்ட டயல்கள் மற்றும் ஆறு காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இந்த வாட்ச்சை அசெம்பிள் செய்வதற்கு மட்டும் ஒரு லட்சம் மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

இந்த ஆடம்பர கடிகாரத்தின் சில்லறை விலை சுமார் 18.07 கோடி ரூபாய். மிகச் சிக்கலான படேக் பிலிப் கைக்கடிகாரம் வெள்ளைத் தங்கத்தால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. இந்த வாட்ச்சின் முன் மற்றும் பின்பக்கம் நீல நிறம் கொண்டது. முன்கூட்டியே நேரத்தை தேர்வு செய்யும் வசதி, அலராம், தேதி குறிக்கும் ஒலி, தூசுக்கள் படியாமல் பாதுகாக்கும் அம்சம், லீப் ஆண்டுகள் என பல்வேறு சிறப்பு அமசங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது.  

வீட்டில் தரித்திரம் நீங்க! முதல்ல இந்த 1 காரியம் செய்து பாருங்க! செல்வம் குவிந்து கொண்டே இருக்கும்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios