4 வயது சிறுமியை காப்பாற்றியது யானை..! வனப்பகுதியில் நடந்த அதிசயம்..!  

மேற்கு வங்க மாநிலத்தில், ஜல்பைகுரி வனப்பகுதியில் 4 வயது சிறுமியைகாப்பாற்றி உள்ளது ஒரு யானை. இந்த வனப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பி உள்ளனர் ஒரு தம்பதியினர்.

அதாவது, லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின் மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் வரும் போது, திடீரென சாலையின் குறுக்கே யானை கூட்டம் சென்று உள்ளது. அப்போது பின்னால் வந்த லாரி மற்றும் மற்ற சில வாகனங்களும் நின்று இந்த அக்கட்சியை பிரமிப்பாக பார்த்து உள்ளனர். பிறகு அந்த யானை கூட்டம் சென்ற பிறகு, வாகனம் மெதுவாக புறப்பட்டு செல்லும் போது மீண்டும் வந்த அடுத்த யானை கூட்டத்தால் பயந்து,திடீரென இருசக்கர வாகனத்தின் பிரேக் பிடித்ததால் 4 வயது குழந்தை மற்றும் மனைவி இருவரும் கீழே விழுந்து உள்ளனர்.

அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒரு யானை மட்டும் தன்னுடைய 4 கால்களின் நடுவே அந்த குழந்தையை வைத்து, மற்ற யானைகள் கிட்டே வராமல் தடுத்து உள்ளது. மற்ற யானைகள் சுற்றி சுற்றி பார்த்து அருகில் வர முயன்றும் அந்த ஒரு யானை மட்டும் குழந்தையின் அருகில் மற்ற யானையை வர விடாமல் தடுத்து சாதூர்த்தியமாக குழந்தையை காப்பாற்றி உள்ளது. மற்ற யானைகள் எல்லாம் சாலையை கடந்த உடன், கடைசியாக இந்த யானை தன்னுடைய இரண்டு கால்களை மெல்ல மெல்ல நகர்த்தி வைத்து குழந்தையை விட்டு சென்று உள்ளது. இந்த  காட்சியை பார்த்த அனைவரும் அப்படியே பயம் கலந்த அதிசயத்துடன் அங்கிருந்து சென்று உள்ளனர்.