ஸ்ரீநகரில் கொடியேற்றுகிறார் அமித்ஷா...! பாதுகப்பு ஏற்பாடுகள் பலே பலே...! 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கி, இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.  இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும், இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில்,உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக்கொடியை ஏற்றுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.