முதியவர்களை அதிகம் தாக்கும் கொரோனா அமெரிக்காவில் 103வயது மூதாட்டியையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் கொரோனா அந்த மூதாட்டிக்கு மரண பயத்தைக்காட்டி மீண்டு உயிர் பிச்சை கொடுத்து அனுப்பியதை பீர் குடித்துக் கொண்டாடினார் அந்த மூதாட்டி. அவர் பீர் குடித்து கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த 103 வயது மூதாட்டி ஒருவர் பீர் குடித்துக் தனது மகிழ்ச்சியை கொண்டாடும் மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
 அமெரிக்காவின் மஸ்ஸாசுசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜென்னி ஸ்டெஜ்னா.இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். முதியவர்களை அதிகம் பாதிக்கும் கொரோனா வைரஸ், 100 வயது கடந்த இந்த மூதாட்டியின் உயிரைப் பறித்துவிடும் என்றே மருத்துவர்கள் ஒரு விதமான அச்சத்துடனே இருந்தனர். அதற்கேற்ப மூதாட்டியின் உடல்நிலையும் மோசமடைந்தது.அந்த மூதாட்டிக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால், மூதாட்டியின் உறவினர்களுக்கு ஓலை அனுப்பியனார்கள் டாக்டர்கள்.

மூச்சு திணறல் ஏற்பட்டதால் மூதாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், கொரோனா தொற்றில் இருந்து அதிசயமாக மீண்டார் ஜென்னி. அவர் கொரோனாவின் பிடியில் இருந்து விடுதலை பெற்றதால்  அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் மூதாட்டியின் பேத்தி மற்றும் குடும்பத்தினர் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தார்கள். கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டி, தனக்குப் பிடித்த "பீர்" குடித்துக் கொண்டாடினார். இந்தச் சம்பவம் மூதாட்டியின் உறவினர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. கொரோனாவில் உயிர் தப்பித்த மூதாட்டி பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.