Ambur Biryani Festival: பிரியாணி என்றவுடன் நாவில் எச்சில் வருகிறதா..? உங்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ஆம்பூரில் மக்களின் ஒருமைப்பாட்டிற்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில், பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.
பிரியாணி சுவைகளில் பல வகைகள்:

பிரியாணி சுவைகளில் பல வகைகள் உண்டு. தேங்காய் பால் பிரியாணி, இது கேரளாவில் அதிக அளவு செய்யப்படுகிறது. திண்டுக்கல் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, வேலூர் பிரியாணி இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரியாணி பிடிக்கும்.
ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா ?

பிரியாணி என்றவுடன் நாவில் எச்சில் வருகிறதா..? உங்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ஆம்பூரில் மக்களின் ஒருமைப்பாட்டிற்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வர்த்த மையத்தில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் குஷியும், கும்மாளமாக ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா ? என அழைப்பு விடுத்துள்ளனர்.
20திற்கும் அதிகமான பிரியாணி வகைகள்:

இங்கு 30 க்கும் மேற்பட்ட அரங்குகள், மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி, பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி, தம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என 20திற்கும் அதிகமான பிரியாணி வகைகள் என நடைபெறும் இந்த விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். குறிப்பாக, இந்த பிரியாணியின் விலை ரூ 100 முதல் 400 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் பிரியாணியின் வரலாறு:
ஆற்காடு நவாப் அரசு, காலகட்டத்தில் படை வீரர்களுக்கு, வேலூரின் நிறைய பகுதிகளில் பிரியாணி சமைக்கப்பட்டது. ருசி மற்றும் தனித்தன்மையால் ஆம்பூர் பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது.
ஆம்பூர் பிரியாணியில் சிறப்பு:

ஆம்பூரில் செய்யும் பிரியாணி இவ்வளவு மசுவு இருப்பதற்கு காரணம் பிரியாணிக்கு என அறுக்கும் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, உயர் ரக பாஸ்மதி அரிசி மற்றும் தரமான மசாலா பொருட்கள் கொண்டு பாலாற்று நீர் கலந்து பிரியாணி செய்வதால் இதன் சுவை எச்சில் ஊற வைக்கிறது.
எனவே, ஆம்பூர் பிரியாணியின் ருசி அறிந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அசைவ பிரியர்கள் ஆம்பூர் பிரியாணி சாப்பிடுவது வழக்கம்.
