Asianet News TamilAsianet News Tamil

அமேசான் நிறுவனர் எடுத்த விபரீத முடிவு..! இப்படி பண்ணிட்டாரே என புலம்பும் மக்கள்...!

மிகவும் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

amazon ownergot divorce from his wife
Author
Chennai, First Published Apr 5, 2019, 3:38 PM IST

மிகவும் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இவர் நாவலாசிரியரான மக்கின்சி என்பவரை காதலித்து 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாட்டை அடுத்து சில ஆண்டுகாலம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி இந்திய ரூபாயில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தனது மனைவிக்கு கொடுக்கிறார் பெசோஸ்.

amazon ownergot divorce from his wife

அதாவது அமேசான் நிறுவனத்தில் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதி அளவான 8 சதவீத பங்கினை தன் மனைவி மக்கின்ஸிக்கு அமெரிக்க சட்டப்படி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 4 சதவீத பங்குகள் மட்டுமே போதும் என அவரது மனைவி ஒப்புக்கொண்டதால், 25 சதவீதத்தை மட்டும் மக்கின்ஸி பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் பல நிறுவனத்தில் தான்  வைத்திருந்த பங்குகளையும் கணவருக்கு விட்டு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவரது மனைவி மக்கின்ஸி. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு விவாகரத்து சொத்து மதிப்பு மீதான உடன்பாட்டிற்கு  இவ்வளவு பணம் கொடுத்திருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அமேசான்  நிறுவனர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என பலரும் சமூக  வலைதளத்தில் அவர்களது கருத்தை பகிர்ந்து  வருகின்றனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios