Asianet News TamilAsianet News Tamil

மயிலிறகை வீட்டில் வைப்பது நல்லதா? கெட்டதா? புராணங்கள் சொல்லும் உண்மை தெரியுமா?

முருக பெருமானுக்கு வாகனமான  மயில்களுக்கு அபார சக்தி உண்டு.  அவற்றிற்கு அந்த சக்தி எப்படி கிடைத்தது என்பது குறித்து புராணங்கள் வழியாக இங்கு தெரிந்து கொள்ளலாம். 

 

amazing peacock feather remedies for prosperity
Author
First Published Jan 23, 2023, 10:00 AM IST

மனிதர்களிடம் உள்ள வேதங்கள், புனித நூல்கள் எல்லாவற்றுக்கும் ஜோதிட சம்பந்தம் உண்டு. மயிலிறகுகளும் அதில் அடங்கும்.  மயிலிறகுகளைக் குறித்து ஜோதிடர்கள் அதிகம் நம்பும் இரண்டு கதைகள் உள்ளன. முதலில், இந்து சிந்தனையின் கலாச்சார அம்சங்களுடன் மயில்களின் உறவை விளக்கும் பல இந்து புராண உதாரணங்களைப் பார்ப்போம். இரண்டாவதாக, வேத ஜோதிடம் மயில் இறகுகளுடன் இணைக்கப்பட்ட குறியீட்டின் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்குகிறது. 

புராணங்களில் இந்திரன் கதை 

அனைத்து கடவுள்களின் அதிபதியான இந்திரன், தனது சக்தியையும் அந்தஸ்தையும் அபகரிக்க விரும்பிய வலிமைமிக்க ராவணனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஆயிரம் ஆண்டுகள் மயிலின் வாலில் ஒளிந்துகொண்டதாக ராமாயணம் தெரிவிக்கிறது. மயிலிறகில் அடைக்கலம் புகுந்த இந்திரன்,  மயிலின் விசுவாசத்தில் மிகவும் இன்புற்றார். அவர் மயிலை  வண்ணமயமான இறகுகளால்  ஆசீர்வதித்தார். இவை பாம்புகளுக்கு பயப்படாமல் தைரியமாக இருக்கவும், ஃபீனிக்ஸ் பழம்பெரும் பறவையைப் போல மந்திர குணப்படுத்தும் சக்திகளைப் பெறவும் அவர் ஆசீர்வதித்தார் என புராணங்கள் குறிப்பிடப்படுகின்றன. 

கிருஷ்ணர் இசையில் மயங்கிய மயில்கள்!

ஒருமுறை கிருஷ்ணர் தனது பசுக்களை கோவர்தன மலைக் காட்டில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார். அதில் உருவான இசையில் லயித்த மயில்கள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் நடனமாடத் தொடங்கின. பகவான் கிருஷ்ணர் தொடர்ந்து புல்லாங்குழல் வாசித்தார். அந்த இசையில் மயங்கிய மயில்கள் பல நாட்கள் தொடர்ந்து நடனமாடின. தன் மயில்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்ததில் திருப்தி கொண்ட மயில்களின் தலைவன் தனது இறகுகளில் சிலவற்றை கிருஷ்ணருக்கு குருதக்ஷிணையாகக் கொடுத்தான். பகவான் கிருஷ்ணர் அனைத்து இறகுகளையும் ஏற்றுக்கொண்டார்.  அவர் அதன் கிரீடத்தைத் தொட்ட கணத்தில், அனைத்து மயில் இறகுகளும் புனிதமாகி, மந்திர குணப்படுத்தும் திறன்களுடன் பல வகையான சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்டனவாம். 

மயில் வைத்தியம் 

பண்டைய காலங்களில் பல கடவுள்கள் மயில்களுக்கு மத ஆசீர்வாதங்களை வழங்கியதாக புராணக் கதைகள் கூறுகின்றன. இந்த சக்திகள் மூலம் அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும்  தீர்க்க மயிலிறகு உதவுகின்றன. அத்தகைய ஐந்து தீர்வுகளை இங்கு  பட்டியலிட்டுள்ளோம்!

செல்வம் அருளும் மயிலிறகுகள் 

  • நீங்கள் ஏதேனும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், மயிலிறகுகள் அதிலிருந்து விடுபட உதவும். நிதி நெருக்கடி உண்டாக்கும் தடைகளை அகற்ற உதவும். செல்வத்தை ஈர்க்க மயிலிறகுகளைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். 
  • ராதா-கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று, கிருஷ்ணரின் கிரீடத்தில் சில மயிலிறகுகளை வைத்து வழிபடுங்கள். கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு, அந்த மயிலிறகுகளை வீட்டிற்கு கொண்டு வந்து, 'கங்கை நீர்' தெளித்த பிறகு ஒரு தொட்டியில் வைத்துவிடுங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்கள் செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • நிதி பாதுகாப்பிற்காக, உங்கள் படுக்கையறையில் உங்கள் புத்தகத்தையும் மயிலிறகையும் வைக்கவும். 

வாஸ்து தோஷம் நீங்க.. 

  • வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க, எட்டு மயிலிறகுகளை எடுத்து வீட்டின் வடகிழக்கு திசையில் 'ஓம் சோமாய நமஹ' என்று சொல்லி வெள்ளை நூலில் கட்டி வைக்கவும். 
  • உங்கள் தலையணையின் கீழ் மயிலிறகுகளை வைப்பது, கெட்ட கனவுகளை தடுக்கும். 
  • மயில் தோகையை கருப்பு நூலால் கட்டி பணப்பையில் வைத்திருப்பது ராகு, சனியின் தோஷங்களை குறைக்கும். 

இதையும் படிங்க: vastu tips: வீட்டின் இந்த திசையில் செருப்பு வெச்சிருந்தா... பிரச்சனை அதிகமா இருக்கும் உடனே மாத்துங்க!

மயிலிறகு அருளும் நன்மை! 

  • தெற்கு திசையில் மயில் தோகை வைப்பது செல்வத்தை ஈர்க்கும். தென்கிழக்கு திசையில் வைப்பது குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
  • மயில் இறகுகளுக்கு நோய் தீர்க்கும் சக்தி உண்டு. அவற்றை உங்களை சுற்றி இருக்குமாறு வைத்துக் கொண்டால் அது உடல்நலப் பிரச்சனைகளையும் எதிர்மறை ஆற்றலையும் குறைக்கும். 

இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல. 

இதையும் படிங்க: மாத்திரைகள் இல்லாமல் பல நோய்களை குணமாக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்...

Follow Us:
Download App:
  • android
  • ios