alternative solution for aadhaar card

ஆதார் எண் இல்லாமல் இனி ஒரு அணுவும் அசையாது என்ற அளவிற்கு, எந்த ஒரு அரசு சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அதாவது அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகள் பெறுவது முதல், ரயில்பயணத்திற்கு முன் பதிவு செய்வது, வங்கிகளில் பணம் செலுத்தவும் எடுக்கவும் , புதிய வங்கி கணக்கு தொடங்கவும் , புதிய வாகனம் வாங்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களில் இதுவரை 5௦ சதவீத மக்களே ஆதார் எண்ணை பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் இதுவரை ஆதார் எண் பெறாமால் இருப்பதால் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் மக்களிடேயே ஏற்பட்டுள்ளது .

அரசிடமிருந்து பெறப்படும் உதவிகளான சமையல் எரிவாயு திட்டம், பயிர்கடன் மானியம் ,சிறு குறு தொழில் மானியம் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, அதார் எண் என்பது அனைவருக்கும் கட்டாயம் தான் , ஆனால் ஆதார் எண் பெரும் வரை , தங்களிடம் உள்ள மற்ற பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவைகளை மாற்று அடையாள அட்டைகளாக காண்பித்து ப அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .