அடுத்தடுத்து அதிரடி... இனி கும்பல் கூட வாய்ப்பே இல்ல..! 6 மணிக்கு மேல் இதுவும் கிடைக்காது...!
   
வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன்அனைத்து டீ கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக ஸ்விக்கி, உபேர், ஜோமேட்டோவுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தகட்டமாக இப்போது டீ கடையும் இயங்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ள து. காரணம் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் நம் மக்கள் நிலைமையை புரிந்துகொள்ளாமல் கும்ப கும்பலாக வெளியில் வருவதும், டீ கடைகளில் கும்பலாக நின்று டீ குடிப்பதுவாக  உள்ளனர். இதன் காரணமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் மக்கள் வெளியில் நார்மலாக நடமாடி  வருவதால் தீவிரமாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது இந்தியா.

இன்றுமாலை 6 மணியுடன் டீக்கடைகள் மூட வேண்டும் என்றும், சமைத்த உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்யும் Swiggy,Uber eats,Zomato நிறுவனத்திற்கும் வரவும் 21 நாட்களுக்கு  தடை விதிக்கப்பட்டு  உள்ளது.மேலும் பாதுகாப்புடன் மக்களுக்கு ரேஷன் பொருட்கள்  மற்றும் காய் கறிகள் மட்டும் கிடைத்திடும்  வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் சமூக விலகல் கடைபிடித்தல் மிக முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில்,மாநகராட்சியும் தொடர்ந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்கிறது.