பொண்ணுங்க பையனுங்கனு பாவம் பார்க்க முடியாது..! ஹெல்மெட் அணியல கண்டிப்பாக மாட்டுவீங்க..!  

அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது குறித்த பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, "அனைவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.. இதனை போக்குவரத்துக்கு போலீசாரும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், "பெங்களூரு கொல்கத்தா போன்ற இடங்களை போன்று தமிழகம் ஏன் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வில்லை என கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "வெயிலின் காரணமாக ஹெல்மெட் அணிய முடியவில்லை என மக்கள் தெரிவிப்பதாக ஒரு பதிலையும் கொடுத்திருந்தது. கூடவே ஹெல்மெட் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் என்பது சிறிய தொகையாகவும் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நீதிபதிகள், "ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஏன் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாவிட்டால் 100 ரூபாயில் இருந்து உயர்த்துவதற்கும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க.. மறுபுறம் ஹெல்மெட் அணிவது குறித்து எப்போதும் ஆண்களை மட்டுமே போலீசார் சோதனை  செய்வதாக ஒரு பரவலான பார்வை இருந்தது. ஆனால் தற்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற முறை மிக தீவிரமாக கடைபிடித்து வருவதால், ஆண் பெண் என எந்தப் பேதமும் இன்றி பெண்களையும் போக்குவரத்து போலீசார் சோதனை செய்கின்றனர். அப்போது ஹெல்மெட் அணியாவிட்டால் அல்லது முறையான லைசென்ஸ் பெறாமல் இருந்தாலோ...அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.

எனவே மற்றவர்கள் சொல்வது போல பெண்கள் என்றால் விட்டு விடுவார்கள் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எனவே இனி யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது. மேலும் ஹெல்மெட் என்பது உயிர் காக்கும் கவசம் என்பதை... நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் வாழ்க்கை வளமாகும். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்கலாம்.