ஒரே ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினால் வீடு தேடி வரும்"மருத்துவ குழு"..! "corona monitoring app"பதிவிறக்கம் செய்யுங்க!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் படி, தற்போது வரை மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாம் மதக்கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து மட்டுமே அதிக எண்ணிக்கையில் கூட்டத்திற்கு சென்று வந்துள்ளதால், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன் படி, தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 411 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அதி வேகமாக பரவும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை நோக்கி உள்ளது. இந்த ஒரு நிலையில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால், அவர்களே ஒரு செல்பி எடுத்து "corona monitoring app" மூலம் தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கும் போது ஜி.பி.எஸ் வசதி மூலம், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து நேரடியாக மருத்துவ குழு சென்று சிகிச்சை அளிக்கும்.   

மக்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னை மாநகராட்சி இணையதளத்தில் (http://www.chennaicorporation.gov.in/) கொடுக்கப்பட்டு உள்ள corona monitoring app செயலியை நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உங்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி தென்பட்டால், உடனடியாக ஒரு செல்ஃபி எடுத்து, இந்த செயலி மூலம் தெரியப்படுத்தினால், ஜிபிஎஸ் வசதி மூலம் மருத்துவ குழு வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் .பின்னர் அவர்களுக்கு தேவையான டெஸ்ட் செய்து, கொரோனா உள்ளதா ? இல்லையா? என உறுதி செய்வார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிமையில் இருப்பதற்கும், அவ்வாறு  இருக்கும் போது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தனியாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.