எச்சரிக்கை மக்களே..! அத்திவரதர் கோவிலுக்கு இன்று வராதீங்க ..! 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகவும் அற்புதமான நிகழ்வான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறும். அந்த வகையில் இன்று 28 ஆவது நாளான இன்று பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்கின்றனர். பொதுவாக முதல் 24 நாள் வரை சயன கோலத்தில் அத்திவரதர் காட்சி கொடுப்பார். அதாவது படுத்தவாறு அத்திவரதர் காட்சி கொடுப்பார். பின்னர் நின்ற கோலத்தில் காட்சி கொடுப்பார். 

அந்த வகையில் சிலையின் உறுதி தன்மையை பொறுத்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்றவாக்கில் காட்சி தருவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் ஒருபக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது.

மதிய நேரத்திற்குள்ளாகவே 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்குகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருப்பதற்காக பொதுமக்களுக்கு காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அவேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே இன்று வெளியூர் பக்தர்கள் காஞ்சிபுரம் வர வேண்டாம் என தெரிவித்து உள்ளது கோவில் நிர்வாகம். ஏற்கனவே கடந்த 18ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 5 மணி நேரத்தில் மட்டும் 35 நபருக்கும் மேலாக மயக்கம் அடைந்துள்ளனர்.