Ajith Fans Atrocities: வலிமை திரைப்படம் வெளியான, நெல்லை ராம் திரையரங்கின் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வலிமை திரைப்படம் வெளியான, நெல்லை ராம் திரையரங்கின் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.

 இப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் ரிலீசாகி, இரண்டு நாட்களில் தமிழகத்தில் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 4 மணியில் துவங்கிய வலிமை படத்தின் முதல் ஷோவில் இருந்து படத்தை காண, பல ஆயிர கணக்கில் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தார்கள். 

முதல் நாளை தொடர்ந்து இரண்டாம் நாளிலும், பல ஆயிர கணக்கில் வலிமை படத்தை பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். பிரபல திரையரங்கம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…