18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர்.

18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும் அரசல்புரசலாக பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகி வருகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

விவாகரத்து செய்யப் போவதாக அவர்கள் அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தனுஷ் ஐஸ்வர்யா குறித்த செய்திகள் பரபரப்பு குறையாமல் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன. தனுஷ் (Dhanush) மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வந்தது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.குறிப்பாக இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்டிருப்பது வழக்கமாக கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை தான், ஆனால் இது விவாகரத்து அல்ல, அவர்கள் இணைந்து வாழ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். தனுஷ் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அந்த வகையில் ,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக மியூசிக் வீடியோ ஒன்றை தனது குழுவுடன் இணைந்து இயக்கி வருகிறார். அதற்கான, படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைப்பெற்றது. 

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்பாடலை தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ காதலர் தினத்தன்று வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.

View post on Instagram


இந்நிலையில். தற்போது ஐஸ்வர்யா அந்த பாடல் வீடியோவின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.