வாடிக்கையாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!  ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் மாஸ் சலுகை..!

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் மே 3ந்தேதி வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்து அறிவிப்பு  வெளியிட்டு உள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் குஷியில் உள்ளனர். ஏற்கனவே ஊரடங்கை முன்னிட்டு ஏப்ரல்17ந்தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்தது.

மே 3 ஆம் தேதி  வரை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை நீடிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மே 3ந்தேதி வரை இன்காமிங் அழைப்புக்கான வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

இதேபோன்று வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை நீட்டித்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, வாட்ஸ் ஆப் மூலம் ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழுக்கள் வீடியோ கால் செய்து  உரையாட முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது உள்ளது. மேலும் zoom செயலி தான் வீடியோ  கால் செய்ய மிகவும் ஏதுவாக இருப்பதால் இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.