airtel idea extended the plan
இன்டர்நெட் சேவையை பெருமளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் 2016 ஆண்டு இறுதியில் ஜியோ வெளியிட்ட பல அதிரடி சலுகையை அறிவித்தது.
ஜியோ அறிமுகம் செய்ய தொடங்கிய இலவச சேவையானது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவிற்கு எதிராக கடும் போட்டியை சமாளிக்க நேரிட்டது.
ஆரம்ப கால கட்டத்தில் ஜியோ இலவசமாக சேவையை வழங்கினாலும்,தற்போது கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோ நிர்ணயித்த கட்டணத்திற்கு நிகராக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது
அதன்படி
ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஏர்டெல்
ரூ.448 திட்டம்
70 நாட்களில் இருந்து 82 நாட்களாக சலுகையை உயர்த்தி உள்ளது
ரூ.509 திட்டம்
84 நாட்களில் இருந்து 91 நாட்களாக சலுகையை உயர்த்தி உள்ளது
ஐடியா
ரூ.449 திட்டம்
70 நாட்களில் இருந்து 82 நாட்களாக சலுகையை உயர்த்தி உள்ளது
ரூ.509 திட்டம்
84 நாட்களில் இருந்து 91 நாட்களாக சலுகையை உயர்த்தி உள்ளது
ஏர்செல் பொறுத்தவரை,சமீபத்தில் 6 மாநிலங்களில் சேவையை நிறுத்தியது.சிறப்பான சேவையை குறைந்த விலையில் அளித்து சமாளிக்க முடியாமல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததால், சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
