Airtel - carbon smartphone!

ஜியோவின் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் இரண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் அண்மையில் ரூ.1500-க்கு
ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஜியோவின் ஸ்மார்ட்போன் போட்டியை சமாளிக்க, தற்போது ஏர்டெல் சந்தை விலையைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இரண்டு 4எ ஸ்மார்ட்போன்கள் கார்பன் மொபைல்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அ1 இந்தியன் போனின் விலை ரூ.1,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் இதன் விலை ரூ.4,390-க்கு விற்கப்பப்படுகிறது. 

அதேபோல ஏ41 பவர் போனின் ரூ.1849-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் இதன் விலை ரூ.4,290-க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மாட் போன்கள் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.