போகியால் புகை மண்டலமாகிய கிண்டி..!  2 மணி நேரம் விமான சேவையும் பாதிப்பு..! 

நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை  சிறப்புமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து, இன்று விடியற்காலையே மக்கள் உற்சாகத்துடன் அதனை தீயிட்டு எரித்து போகி பண்டிகை பண்டிகையை கொண்டாடினர்.

நாடு முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவி வரும் இந்த சமயத்தில் இன்று போகி பண்டிகை என்பதால் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து அதன் மூலம் கிளம்பிய பனிமூட்டமும் ஒன்று சேர்ந்து புகைமண்டலமாக மாறியது. அதிக பனி மூட்டமும், போகி புகையும் ஒன்று சேர்ந்து இன்று காலை சென்னையில் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதில் சென்னை புனே, திருச்சி, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமானங்களின் சேவை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதேபோன்று, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த விமானமும், சென்னையில் இருந்து மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.