Asianet News TamilAsianet News Tamil

1 ரூபாய்க்கு விமான சேவை..! எப்போ..எங்கே...யாருக்கு தெரியுமா..?

air deccan starts the flight service again
air deccan starts the flight service again
Author
First Published Dec 13, 2017, 3:31 PM IST


1 ரூபாய்க்கு விமான சேவை..! எப்போ..எங்கே...யாருக்கு தெரியுமா..?

ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவங்க உள்ளதால், அறிமுக சலுகையாக ஒரு ரூபாயில் பயணம் செய்ய புதிய சலுகையை  அறிவித்துள்ளது

இது குறித்து அதன் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் தெரிவிக்கும் போது,
கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவைய தொடங்கப் பட்டது.அப்போது  ஒரு ரூபாயில் பயணம் செய்யும் சேவையை அறிமுகம் செய்தோம்.பயணிகளை ஈர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த ஒரு ரூபாய் கட்டண சேவையால் நஷ்டம் அடைந்த பிறகு கிங்பிஷர் விமான நிறுவனத்துடன் இணைந்தது.

இதற்கிடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிங்பிஷர் தன்னுடைய  சேவையை நிறுத்தியதால்,ஏர் டெக்கான் சேவையும் சேர்ந்தே தடைப்பட்டது

இந்நிலையில் மீண்டும் தன் சேவையை தொடங்க உள்ள ஏர் டெக்கான்,உதான் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வரும் 22-ம் தேதி நாசிக்கில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

உதான் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரம் விமானத்தில் பறக்க ரூ. 2,500 கட்டணம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.மீதம் தேவைப்படும் தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும்

தொடக்கத்தில்,மும்பை, டெல்லி, ஷில்லாங்,கொல்கத்தா ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சேவை துவங்கப்படுகிறது.இந்த சேவை ஒரு குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்ல மட்டுமே பொருந்தும் என்பது கூடுதல் தகவல்

மேலும்,நாசிக்கில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக செல்ல 4  மணி நேரம் எடுத்துகொள்ளும்.இதனை தவிர்க்கும் பொருட்டும்,குறைந்த  கட்டணத்தில்,குறுகிய நேரத்தில் பயணிக்கும் வண்ணம் ரூ.1400 க்கு டிக்கெட்  வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது

மேலும்,ஒவ்வொரு முறையும் முதலில் டிக்கெட் புக் செய்யும் அதிர்ஷ்டசாலி பயணிக்கு ரூ.1 இல் டிக்கெட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios