Asianet News TamilAsianet News Tamil

கடவுளே இது மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. வாய் மூலம் ஆக்சிஜன் அளித்து கணவரை காப்பாற்ற போராடிய மனைவி.!

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் மூச்சுத் திணறல் அவதிப்பட்ட கணவருக்கு  மனைவி வாய் வழியாக சுவாசம் அளித்து காப்பாற்ற போராடியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Agra woman resuscitating dying Covid positive husband by breathing into mouth
Author
Uttar Pradesh, First Published Apr 27, 2021, 12:49 PM IST

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் மூச்சுத் திணறல் அவதிப்பட்ட கணவருக்கு  மனைவி வாய் வழியாக சுவாசம் அளித்து காப்பாற்ற போராடியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அப்படி இருந்த போதிலும் மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்தியாவில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு  உலக நாடுகள் பலவும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

Agra woman resuscitating dying Covid positive husband by breathing into mouth

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு  (47) கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆட்டோ மூலம், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது மனைவி அழைத்து வந்திருந்தார்.

Agra woman resuscitating dying Covid positive husband by breathing into mouth

கணவரின் உடல்நிலை மேலும் மோசடைந்ததால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆட்டோவில், தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்ஸிஜன் அளித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் கதறி துடித்த மனைவியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios