மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கர்நாடக மற்றும் குமரி மாவட்டம் வரையில் மேலடுக்கு சுழற்சி காணப்பட்டதால், தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கு மிதமான மழை பெய்தது.

அந்தவகையில் தர்மபுரி கன்னியாகுமரி உதகை நீலகிரி வாணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற மே 4ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி நட்சத்திர வெயிலின்போது அதிக வெப்பம் உணர முடியும் என்றும், இது மே 4 முதல் மே 29 ஆம் தேதி வரை, அதாவது 26 நாட்கள் நீடிப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் முன்னெச்சரிக்கையாக வெயில் நேரத்தில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது, எங்கு சென்றாலும் காலை அல்லது மாலை நேரங்களில் வெளியில் செல்லலாம். அவ்வாறு வெளியில் செல்லும் போது கூட தன்னுடன் எப்போதும் ஒரு வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு குடை வைத்துக் கொள்வது சிறந்தது.

உடன் போகும் வழியில் உள்ள பழச்சாறு மற்றும் இளநீர் நுங்கு தர்பூசணி தயிர் மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது சிறந்தது.வீட்டில் உள்ளவர்களும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பது உடலுக்கு நல்லது.