இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் தனிமைபடுத்தலை கையில் எடுத்துள்ளனர். இதனால் நாடே வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. 

இந்நிலையில் ஆன் லைன் டேட்டிங் ஆப் குறித்து வெளியான தகவல் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது இன்டர்நெட் சேவை மட்டுமே. அதன் மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளனர். 

சமீபத்திய ஆய்வில், வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இளைஞர்கள் வேற வழி இல்லாமல் ஆன்லைன் டேட்டிங் ஆப்-களை அதிகம் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில், கிளீடன் ஆப் என்ற நிறுவனம் நடத்திய சோதனையில் அவர்களது சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் திருமணமானவர்கள் கள்ள தொடர்பு வைத்துக்கொள்ள இந்த ஆப்பை பயன்படுத்துவது பகீர் கிளப்பியுள்ளது.