aeroplane handled by tamilan in us with the traditional dress
அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
அதாவது தனி விமானத்தை ஓட்டி உள்ளார்.இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த விரும்பாதவர்
இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், 'தொடர் செயற் திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.
இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும். ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.
இவருடைய சாதனையை விட வேட்டி கட்டிக்கொண்டு விமானம் ஓட்டும் அந்த காட்சி தான் அனைவரின் மனதிலும் பதிந்து உள்ளது
