பேரழகி அஞ்சலியா இப்படி செய்வது...? ஆடிப்போன மற்ற நடிகைகள்...!

நடிகை அஞ்சலி "கற்றது தமிழ்" படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் அங்காடிதெரு. அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஞ்சலி

பின்னர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர் கொண்டார். அவரின் சித்தி உடனான பிரச்சினையால் ஆந்திராவில் சில ஆண்டு தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த ஒரு தருணத்தில் படவாய்ப்புகளும் சற்று குறைவாக கிடைத்தது. அஞ்சலியும் படத்தில் நடிப்பதை சற்று தள்ளி வைத்திருந்தார். இந்த ஒரு நிலையில் மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் நடித்து கடைசியாக வெளிவந்த படம் சிந்துபாத். தற்போது காண்பது பொய், பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் நாடோடிகள் 2 படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள அஞ்சலியை காண அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய உடல் அழகை சிக்கென வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் ஒரு சவாலான யோகாவை செய்து, தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார் நடிகை அஞ்சலி. இந்த ஒரு புகைப்படம் தற்போது அஞ்சலியின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து உள்ளது.