விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தின் கதை இதுதான் ..! இப்போதே மாஸ் காட்டும் ரசிகர்கள் ..! 

விஜய்யின் 65  வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ்  இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே அஜித் விஜய் ரஜினி என முன்னணி ஹீரோக்கள் அனைவரும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்பபாங்கான படம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருந்த தருணத்தில் 2019ஆம் ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த விசுவாசம் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதன் பின்பு ரஜினிகாந்த்தின் 168 வது படத்தை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த படம் குடும்பப் பின்னணி கொண்டதாகவும் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தற்போது பிஸியாக நடித்து வரும் மாஸ்ட்டர் படத்திற்கு அடுத்த படமாக குடும்ப பின்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் பாண்டிராஜை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னதாக நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட குடும்ப பின்னணி கொண்ட படங்களை எடுத்து பெரிய ஹிட் கொடுத்தவர் பாண்டிராஜ். இந்த நிலையில் விஜய் நடிக்க உள்ள 65 ஆவது படம் ஒரு குடும்பப் பின்னணியைக் கொண்டு இருக்கும் என உணரமுடிகிறது.