நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் கடைசி நிமிட நேரத்திலும் வடிவேலு தான் உதவி ..! சோகமான சம்பவம்..! 

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பிரபல நடிகர் கிருஷ்ணமூர்த்தி குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவருக்கு தன்னுடைய சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க மிகுந்த ஆர்வமாம். 

17 வயதாகும்போது சென்னைக்கு வந்துள்ளார் இவர். பல இடங்களில் சினிமா வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து உள்ளார். அப்போது புரோடக்சன் மேனேஜர் வேலை கிடைத்துள்ளது.

பின்னர் பல விளம்பர நிறுவனங்களிலும், சினிமா நிறுவனங்களிலும் வேலை செய்த கிருஷ்ணமூர்த்திக்கு நடிகர் வடிவேலுவின் நட்பு கிடைத்துள்ளது. பின்னர்தான் சாணக்கியா தவசி ஐயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் வடிவேலு கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து நடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க... நடிகர் கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த 2008ம் ஆண்டே காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது நடிகர் வடிவேலு அதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் இதே போன்ற ஒரு தருணத்தில் உதவி செய்துள்ளார் வடிவேலு.

பத்தாம் வகுப்பு வரை படித்த கிருஷ்ணமூர்த்திக்கு படிப்பைவிட படத்தில் நடிப்பதில் தான் ஆர்வம். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். எப்படியாவது படத்தில் நடித்து சாதித்துக் காட்ட வேண்டும் என நினைத்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் என்று பார்த்தோமேயானால், ஒரு பக்கம் பல கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு பிரபலமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.. இன்னொரு பக்கம் குறைந்த தொகைக்கு ஒப்புக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.. என்பதுதான் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை பயணம் நமக்கெல்லாம் உணர்த்துகிறது என்றே எண்ண வைக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், படப்பிடிப்பின் போதே உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் இறுதி சடங்கிலும் வடிவேலு தான் உதவி செய்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.