பொங்கலுக்கு ரெடியான எம்.ஜி.ஆர் மகன் ..! தெரியுமா இந்த சங்கதி..! 

வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டாட இப்போதே பல அதிரடி அறிவிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளது 

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ராஜவம்சம். இந்த 2 படங்களுமே போன்கால் தினத்தன்று வெளியாக  உள்ளது என்ற தகவல் கிடைத்து உள்ளது. 

இந்த படத்தை இயங்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க சசிகுமார் நடித்து இருக்கும் படம் ராஜவம்சம். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த 2 படங்களுமே முழுக்க முழுக்க கிராமத்து குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் தினத்தன்று சசிகுமார் நடித்த படங்கள் படங்கள் திரைக்கு வருவதால் ரசிகர்களும் குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்ப்போடு உள்ளனர்.