நடிகர் அர்ஜுன் வெளியிட்ட வீடியோ..!  சுழன்று சுழன்று கீழே விழும் காட்சி..!

சமுக வலைத்தளத்தில் எப்போதுமே ஏதாவது ஒரு விஷயம் வைரலாக பேசப்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கிக்கி challange , ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேனலில் சேலஞ்ச், நில்லு நில்லு challange சவால் விடும் பல சேலஞ்ச் பார்த்து இருப்போம்.  

அந்த வகையில் அப்போது மிகவும் வைரலாக பரவ கூடிய (Bottole Cap Challange) அனைவரின்  கவனத்தை  ஈர்த்து உள்ளது. கஜகஸ்தான் சேர்ந்த தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.அதில் ஒருவர் தண்ணீர் பாட்டிலை கையில் பிடித்திருக்க, இவர் தன் காலால்   
பேக் கிக் கொடுத்து, பாட்டிலின் மேல் மூடியை அகற்றுவார்.அப்போது பாட்டிலின் மூடி தனியாக சுழன்று சுழன்று தெறித்து பறக்கிறது.

இந்த சாகசத்தை நீங்கள் செய்ய முடியுமா? என சவால் விட்டு பிவீடியோவை பதிவிட்டு  இருந்தார். பின்னர் இந்த  வைரலாநதி தொடர்ந்து டிரான்ஸ்போர்ட் ஹாலிவுட் படம் மூலம் பிரபலமான நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தமிழ் நடிகர் action king arjun உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பாட்டில் மூடி சவால் வெற்றிகரமாக செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது அடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சேலஞ்சை செய்து அவரவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது