எங்கு சென்றாலும் மாஸ் ஹீரோவாக பார்க்கப்படும் அபிநந்தன்..! 

பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமான படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சுரத்கர்  விமான தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா.அப்போது எதிர்பாராதவிதமாக விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். பின்னர் ஒரே நாளில் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நாடு முழுவதும் மிகவும் பிரபலமடைந்த அபிநந்தன்.

பின்னர் தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணத்திற்காக ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து ஏற்கனவே மேற்குபகுதி விமானப் படைத்தளத்திற்கு அவர் மாற்றப்பட்டிருந்தார். இதற்கிடையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் சுரத்கர் விமானப்படை தளத்தில் சென்ற சனிக்கிழமை அன்று பணியமர்த்த பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் விமானப்படை தளத்தில் அபிநந்தன் பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் மீண்டும் ராஜஸ்தானில் அபிநந்தன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். விமானப்படை தளத்தில் உள்ள அனைவரும் அவரை உற்சாகமாக வரவேற்று ஆனந்தமாக அவருடன் செல்பி எடுத்து செல்கின்றனர். இதுதவிர அபிநந்தன் எங்கு சென்றாலும் அவருடன் செல்பி எடுப்பதில் பொதுமக்களும் சரி ராணுவ வீரர்களும் சரி அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு  அபிநந்தனை மிக சிறந்த வீரராக மட்டுமல்ல.. மாஸ் ஹீரோவாக  பார்க்கின்றனர் மக்கள்.