aathar ticket is must to do online railway ticket

ஆன்-லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய “ஆதார் கார்டு” கட்டாயம்....

நகர் புறங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள், விழாக்கால விடுமுறையின் போது, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு முன்னதாக விழாக்காலம் என்றாலே , நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் மக்கள் தேர்வு செய்ய முடியும்

குறிப்பாக விழாக் காலங்களில், சொந்த ஊருக்கு செல்ல, 2 அல்லது 3 மதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்வது வழக்கம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் வகையில், ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கென என,ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், மேலும் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு முறை ஆதார் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரம்

ரெயில்வேயில், 60 ஆயிரம் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் மற்றும் 1000 ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.