காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் என்ற பகுதியில் தனியார் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் கல்லூரி மாணவர் ஒருவர் 

சென்னையை அடுத்த திருப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த சையத் என்னும் மாணவர். இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில் தன் அறையை விட்டு வெளியே வரும்போது தானியங்கி மூலம் தனது அறை பூட்டப்பட்டுள்ளது.அப்போது தான் அவருக்கு  தெரியவந்துள்ளது வீட்டின் சாவியை அறைக்கு உள்ளே வைத்துவிட்டு மறந்து வெளியே வந்துள்ளார் என்று... பின்னர் எப்படி உள்ளே சென்று சாவியை எடுப்பது என யோசனை செய்து, மாடியிலிருந்து கயிறு கட்டி ஜன்னல் வழியாக இறங்கி உள்ளே சென்று சாவியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து,14 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த அந்த நபர், விழுந்த வேகத்தில் அவருடைய தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.