இன்று இரவு 9.30 மணிக்கு.... அவரசமாக சென்னைக்கு வருகிறது "சிறப்பு குழு"..! மத்திய அரசு அடுத்த அதிரடி ..! 

கொரோனா பரவுவதை தடுப்பதற்காகவும், ஹாட்ஸ்பாட் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை ஹைதராபாத் அகமதாபாத் சூரத் இந்த நான்கு இடங்களை கண்காணிக்க மத்திய அரசு தனி சிறப்பு குழு அமைத்து உள்ளது. அதன்படி இன்று இரவு 9.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்த குழு விரைகிறது.

மருத்துவர் திருப்புகழ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்த குழுவானது, சென்னையில் தங்கி எந்தெந்த பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றும் அதற்கான காரணங்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய அதிரடி நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். மேலும் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பரவல் எண்ணிக்கையை மெல்ல மெல்ல குறைக்கும் பணியில் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

நாட்டின் பெரும் நகரங்களான ஹைதராபாத்,சென்னைசூரத், சூரத்,அஹமதாபாத் ஆகிய இடங்களில்இருந்து பபுள்ளி விவரங்களை சேகரித்து, மத்திய அரசுக்கு இந்த குழுவானது அறிக்கை தாக்கல் செய்யும்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் 400 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உள்ள கோவை, மதுரை,சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

வரும் ஞாயிறு முதல் புதன் வரையிலான 4 நாட்களில் கொரோனா பரவல் தடுப்பதை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மத்திய அரசும் ஒரு சிறப்பு குழுவை இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னைக்கு அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.