Asianet News TamilAsianet News Tamil

பாம்பு கடித்தால் உயிருக்கேஆபத்து.. ஆனால் பாம்பு விஷத்தை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பாம்பு விஷத்தை குடித்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு நிணர்கள் சொன்ன பதில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 
 

A snake bite is life-threatening...but do you know what happens if we drank snake venom? Rya
Author
First Published Nov 20, 2023, 4:25 PM IST | Last Updated Nov 20, 2023, 4:25 PM IST

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆம்.. உலகின் ஆபத்தான உயிரினங்களில் பாம்பும் ஒன்று. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3,500 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில், 25 சதவீதம் மட்டுமே விஷம் கொண்டவை என்று கூறப்படுகிறது. ராஜ நாகம் உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. பாம்புகள் அவற்றின் பற்களைப் பயன்படுத்தி நம் உடலில் விஷத்தை செலுத்துகின்றன.

பாம்புகளின் வாய் சுரப்பிகளால் விஷம் சுரக்கிறது. ஒரு விஷப்பாம்பு மனிதர்கள் அல்லது பிற உயிரினங்களை கடிக்கும் போது, நச்சுப் புரதங்கள், நொதிகள் மற்றும் பிற மூலக்கூறுப் பொருட்களின் சிக்கலான கலவையை நமது இரத்த ஓட்டத்தில் செலுத்துகின்றன. இதனால் நமது செல்லுலார் இயக்கம் உடைந்து,  அதன் மூலம் உங்களை செயலிழக்கச் செய்கிறது, இது பெரும்பாலும் பக்கவாதம், உட்புற இரத்தப்போக்கு மற்றும் இறப்புக்கு வழிவகுக்கிறது. இந்த நிகழ்வு பற்றி பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் பாம்பு விஷத்தை பானமாக உட்கொண்டால் விளைவு ஒரே மாதிரியாக இருக்குமா? என்ற கேள்வியை பல நெட்டிசன்கள் இந்த கேள்வியை Quora தளத்தில் எழுப்பினர். அதற்கான அனைத்து பதில்களையும் படித்த பிறகு, பாம்பு விஷத்தை உட்கொண்ட நபர் உடனடியாக இறக்க மாட்டார் என்று யூகிக்க முடிகிறது.

பாம்பு விஷத்தை குடித்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு நிணர்கள் சொன்ன பதில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 
பாம்பு கடித்தால் ஆபத்தாக முடியும் ஆனால் பாம்பு விஷத்தை குடிக்க முடிவு செய்தால் அதன் விளைவு வேறு விதமாக இருக்கும். பாம்பு விஷம் விஷத்திலிருந்து வேறுபட்டது என்பதை நீங்கள் முதலில் கவனிக்க வேண்டும். Quora பயனர்களில் ஒருவர், பாம்பு விஷம் என்பது புரத அடிப்படையிலான நச்சு, இது வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான நொதிகளின் உதவியுடன் ஜீரணமாகிறது என்று கூறினார்.

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா? இது தெரியாம போச்சே..

மேலும் “ இது வயிற்றில் உடைந்து உணவு செரிமானத்திற்கு உதவும். இருப்பினும், இந்த துணிச்சலான செயலை முயற்சிக்கும் முன் நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாய், உணவுக் குழாய், குடல் அல்லது உள் உறுப்புகளில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், இந்த விஷம் உங்கள் இரத்த ஓட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம், இது பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.

பாம்பின் விஷம் உங்கள் இரத்த ஓட்டத்தை அடைந்தால், அது உங்கள் தமனிகளுக்குள் நுழைந்து, பாம்பு கடித்த பிறகு ஏற்படும் அதே விளைவாக இரத்தக் கட்டியை உருவாக்கத் தொடங்கும். விஷம் இரத்தத்துடன் தொடர்பு கொள்ளாத வரை பயனற்றதாகவே இருக்கும். எனவே, ஒரு சுகாதார நிபுணரின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios