திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காணாமல் போன ஒரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தாழையூத்து என்ற பகுதிக்கு அருகே உள்ளது குறிச்சி குளம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுவன் சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இவனை பல இடங்களில் தேடி பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கண்டுபிடிக்க முடியாமல் செய்வதறியாது திகைத்து காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது, இதற்கிடையில் குறிச்சி குளம் கிராமத்திற்கு அருகே உள்ள நான்கு வழி சாலையின் அருகே ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவே, ஓடிவந்த பெற்றோர்கள் அது தங்களுடைய பிள்ளைதான் என அடையாளம் காட்டினர். காணாமல் போன சிறுவன் திடீரென சடலமாக பார்த்த பெற்றோர் கதறி அழுது உள்ளனர். 

மேலும் சிறுவனின் ஆடையும் ஆங்காங்கு கிழிக்கப்பட்டு இருந்ததை பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பானோ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே 19 வயது இளைஞன் மாயாண்டி என்ற ஒரு நபர் சிறுவனிடம் கடைசியாக பேசியதில் ஒரு சிலர் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தனர்.

பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட சிறுவனிடம் டார்ச்சர் செய்து வந்ததும் பின்னர் அதற்கு சிறுவன் மறுத்ததாகவும் அது மட்டுமல்லாமல் அனைவரிடமும் இந்த விஷயத்தை சொல்லப்போவதாக அழுதுகொண்டே கூறி உள்ளான். 

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுவனை அடித்துக் கொலை செய்து உள்ளார். ஓரினசேர்க்கைக்கு சிறுவனை பலிவாங்கிய மாயாண்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.