செயற்கை கருத்தரித்தல் கிளினிக்கை நடத்தி வந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தன்னுடைய உயிரணுக்கள் மூலம் 49 குழந்தைகளுக்கு தந்தையான சம்பவம் நெதர்லாந்தில் நடந்துள்ளது.

செயற்கை கருத்தரித்தல் கிளினிக்கை நடத்தி வந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தன்னுடைய உயிரணுக்கள் மூலம் 49 குழந்தைகளுக்கு தந்தையான சம்பவம் நெதர்லாந்தில் நடந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜன் கர்பாட் என்ற மருத்துவர் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் கிளினிக் நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சைக்காக பல பெண்கள் வருவது வழக்கம். அவ்வாறு சிகிச்சை பெற வந்திருக்கும் பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமலே சிகிச்சை என்ற முறையில் அவருடைய உயிரணுக்களை கர்ப்பப் பைக்குள் செலுத்தி உள்ளார்.

இவ்வாறாக 49 பெண்களுக்கு குழந்தை கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் இவரிடம் சிகிச்சை பெற்ற பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை பார்க்கும் போது மருத்துவர் ஜன் கர்பாட் போலவே தோற்றத்தில் இருந்ததால் ஒரு சந்தேகத்தின் பெயரில் டிஎன்ஏ சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் ஒரு பெற்றோர்.

அப்போது கிடைத்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர் ஒரு பெற்றோர். பின்னர் அவரிடம் சிகிச்சை பெற்ற மற்ற பெற்றோர்கள் மேற்கொண்ட டிஎன்ஏ சோதனை களையும் ஆராய்ந்த போது குழந்தைகள் அனைவரும் ஜன் கர்பாட் மருத்துவரின் உயிரணுக்கள் மூலம் பிறந்துள்ளதை கண்டு பிடித்து உள்ளனர். 

அதுவரை, இந்த பெண்களின் கணவன்மார்கள் மற்றும் மனைவி சிகிச்சை பெற்றதன் மூலம் தங்களுக்கு தான் குழந்தை பிறந்துள்ளது என இருந்துள்ளனர். ஆனால் அது மருத்துவரின் உயிரணுக்கள் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தைகள் என தெரியவந்ததை அடுத்து பெரும் மனசங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்.