பவுர்ணமியன்று "ஒன்று சேரும் மாபெரும் தென்னிந்திய திருடர்கள்"..!

ஆந்திராவில் பவுர்ணமியன்று நடைபெறும் திருடர் குல திருவிழா  குறித்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருடர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்களாம். அதனை ஒரு பிரம்மாண்ட திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர்.  

கடந்த 30 ஆம் தேதி காலை சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் 4 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்த போலீசார் பல திடுக்கிடும் தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் மற்றும் புளியந்தோப்பு ஓசை மணி என்பவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவலைகள் வெளிவந்துள்ளது. 

பிடிபட்டவர்கள் தெரிவித்தது..

"பொதுவாகவே நாங்கள் சென்னையில் கொள்ளையடித்துவிட்டு மாதம் மாதம் பௌர்ணமி தினத்தன்று திருவிழாவிற்கு சென்று விடுவோம். ஆந்திர நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கசந்தரில், நடக்கும் இந்த விழாவில் ஆட்டம் பாட்டம் என பல கொண்டாட்டங்கள் இருக்கும். தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய பல முக்கிய திருடர்கள் அனைவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.. அவர்களுடன் தொடர்பு கிடைக்க நாங்களும் மாதம் மாதம் முழு பௌர்ணமி தினத்தன்று இந்த விழாவில் கலந்துகொள்ள செல்வோம்... இந்நிலையில் தான் எங்களை தற்போது நீங்கள் பிடித்து விட்டீர்கள்" என தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பி  உள்ளனர் போலீசார்.