ஒரே வாரத்தில் 1500 போர்ன் வீடியோஸ் டவுன்லோட்..!  சிக்கியது யார் ...? அடுத்து சிக்கப்போவது யார்..? 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் இந்த ஒரு தருணத்தில் தமிழகத்தில் ஏடிஜிபி ரவி தலைமையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகள் வைத்து எடுக்கப்படும் பாலியல் தொடர்பான வீடியோக்களை அதிகம் பார்க்கப்படும் நாடு இந்தியா என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அதுகுறித்த தகவலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்த மேலும் பல அதிர்ச்சித் தகவல் அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

அதாவது இந்தியாவில் அதிக அளவில் ஆபாச வீடியோக்களை பார்க்க கூடியவர் தமிழகத்தில் தான் அதிகம் என்றும் அதிலும் குறிப்பாக சென்னையில் தான் அதிகம் என்றும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன்படி தற்போது ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்வதும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலம் பரப்புவதும் தண்டனைக்குரிய ஒன்று என்றும், இவ்வாறு செய்யும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க மும்முரம் காட்டப்பட்டு வருகிறது.
 
அதன் படி, ஆபாச வீடியோ பரப்பிய 3 குழுக்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் அந்தக் குழுக்களில் இருந்த மற்றவர்களையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு தருணத்தில் இது குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வரும் சமயத்தில் ஏற்கனவே அவரவர் மொபைல் போனில் வைத்திருக்கும் ஆபாச வீடியோக்களை அழித்து வருகின்றனர்.

இந்த  ஒரு தகவலையும் அவர்கள் பயன்படுத்திய ஐபி எண் கொண்டு ஸ்ட்ரேஸ் செய்து வருகின்றோம். மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வாரத்திற்கு சாதாரணமாக 1500 ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய விஷயம் அதற்காகத்தான் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.