Daytime Sleeping: மதியம் சாப்பிட்ட பின்னர் ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என யோசிப்போம். அப்படி தூங்குவது நல்லதா..? என்று பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓடும். இது குறித்து மருத்துவர்கள் கூறும் விளக்கம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
மதியம் சாப்பிட்ட பின்னர் ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என யோசிப்போம். அப்படி தூங்குவது நல்லதா..? என்று பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓடும். இது குறித்து மருத்துவர்கள் கூறும் விளக்கம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
பகல் தூக்கம் நல்லதா..? கெட்டதா..?

சிலர், பகலில் சிறிது நேரம் தூங்கினால் புத்துணர்ச்சி உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். ஒரு சிலர், பகல் நேர தூக்கம் உடலை சோம்பேறி ஆக்குது என்கின்றனர். வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால், சிலரின் அதிகப்படியான தூக்கம் உடலுக்கு ஆரோக்கிய பாதிப்பை உண்டு பண்ணுகின்றது. எனவே, இவற்றில் எது சரி, என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தூக்கத்தின் நன்மைகள்:

தற்போது மருத்துவர்கள் கூறும்போது, மதியம் 1-3 மணி வரையிலான காலத்தில் 15-20 நிமிடங்கள் தூங்குவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். இது இரவு தூக்கத்தையும், பாதிக்காது. நீரழிவு, தைராய்டு, வயிறு உப்புசம் ஆகிய பிரச்சனை இருப்பவர்களுக்கு மதிய துக்கம் உதவி செய்கிறது. ஆனால், மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக்க கூடும்.
அதிக நேரம் தூக்கத்தின் விளைவுகள்:

எனவே, பகலில் தூங்கும் போது அலாரத்தை வைத்து கொண்டு சிறிது நேரம் தூங்கலாம். இவை உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும். இருப்பினும், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்துவது சிறந்தது. இல்லையெனில், எடை இழப்பு, நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் தோன்றுமாம். எனவே, யாருக்கு தூக்கம் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!
