உயிருக்கு போராடிய நேரத்தில்.. "தன் வெண்டிலேட்டரை" இளம் நோயாளிக்கு கொடுத்து உயிர்தியாகம் செய்த "மூதாட்டி" !

சோதனையிலும் சாதனை செய்ய ...முடியும். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் தன் உயிரையே தியாகம் செய்து இளம் நோயாளியின் உயிரை காப்பாற்றிய மூதாட்டி  குறித்த நெகிழ்ச்சி சம்பவம் தான் இது.

உலக நாடுகளே கொரோனவால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. ஒருபக்கம் உயிரிழப்பு. மற்றொருபக்கம் அதிவேகமாக பரவும் தொற்று. இந்த ஒரு நிலையில் பொதுவாகவே  கொரோனாவால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதில் பாதிக்கின்றனர். மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர், இந்த தோற்று பற்றி நன்கு அறிந்து  வைத்திருந்தார். எனவே தன்னை விட இளம் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்  கொடுத்தால் அவர்கள் உயிராவது காப்பாற்றப்படும் என உணர்ந்த அவர், தனக்கு மருத்துவர்கள் பொறுத்த வந்த வென்டிலேட்டரை இளம் நோயாளிக்கு கொடுங்கள் என தெரிவித்து உள்ளார் 

மேலும் அவர், "நான் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். இனி  எனக்கு ஒன்றும் வேண்டாம். உயிர் ஆசை இல்லை. இந்த வெண்டிலேட்டரால் என்னை காப்பாற்றுவதை விட இளம் நோயாளிகளுக்கு வழங்குவது   சரியானது என தெரிவித்து உள்ளார். அதன் படியே மருத்துவர்களும் வேறு ஒருவருக்கு வழங்கி அவர் உயிரை காப்பாற்றி உள்ளனர். ஆனால் மூதாட்டி சொன்னபடியே அட்மிஷன் போட்ட அடுத்த 2 நாட்களில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது