புற்றுநோய், வலிப்பிற்கு சரியான மருந்து கண்டுப்பிடிப்பு..! இந்தியாவில்...

புற்று நோய் மற்றும் வலிப்பு இவை இரண்டையும் சரி செய்யும் அடுத்தக்கட்ட மேம்படுத்தப்பட்ட மருந்து மிக விரைவில் இந்தியாவில் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துகளை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) அறிமுகம் செய்து உள்ளது. இந்த இரண்டு மருந்துகள் தற்போது வெளிநாடுகளில் கிடைகின்றது. இந்தியாவில் மிக அரிதாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கஞ்சாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த மருந்தை தற்போது அமெரிக்கா  ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்தியாவில் தயாரித்து இங்கேயே பயான்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு 

புதிய மருந்துகள் 

CBD கஞ்சா சாடிவா
THC டெட்ராஹைட்ரோகாநானோனால் 

இதற்கான சோதனையில் தற்போது CSIR இன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவம் (IIIM) டாடா மெமோரியல் மருத்துவமனையும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதே சமயத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கான பரிசோதனைகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதால் ஒரு சிலர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் தற்போது இந்தியாவிலேயே இதற்கான சோதனை தொடங்கி உள்ளதால் அடுத்த ஆண்டே பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது. இந்த இரண்டு மருந்துகளும், இந்தியாவிலேயே கிடைக்கப்பெற்றால் அதன் விலை குறைவாக தான் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் அதே மருந்தின் விலை லட்சங்களில் தான் என்பது கூடுதல் தகவல்