குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல் துறை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள், பாலியல் கொடுமை, கொலை, கொள்ளை என பல்வேறு சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு காண புதிய புரிவாய் உருவாக்கி உள்ளது தமிழக காவல் துறை...


 
அதன் படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக போலீசார் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய பிரிவின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.